சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனைக் கண்ட கமலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர். அதற்குள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகி விட்டது. இதனைக் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் அதிக நேரமாக சார்ஜர் போட்டு இருந்ததால் அதிக அளவு மின்சாரம் அதில் பாய்ந்து சார்ஜர் வெடித்து வீட்டில் தீ பிடித்தது தெரியவந்துள்ளது.