புதுக்கோட்டை மாவட்டத்தில் தீடிரென சாலையோரத்திலுள்ள புளியமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் சாலையோரத்தில் புளிய மரங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த புளியமரத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடிய பினபே தீயை அணைத்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் புகைப்பிடித்து விட்டு புகையை அணைக்காமல் போட்டு விட்டு சென்றதால் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.