Categories
சென்னை மாவட்ட செய்திகள்

55% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை… சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன

இந்நிலையில் இந்தியா முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 55%பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொது மக்கள் தயக்கம் காட்டாமல் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா குறைவாக இருக்கும்போதே விரைவாக செலுத்துவது நல்லது என எச்சரித்துள்ளது.

Categories

Tech |