Categories
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப பிரச்சனை… புதரில் தரையிறங்கிய தொழிலதிபரின் ஹெலிகாப்டர்…!!!

கேரளாவிற்கு தனது உறவினர்களை பார்ப்பதற்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

1973 ஆம் ஆண்டு கேரளாவில் வசித்து வந்த யூசுப் அலி என்பவர் மாமாவின் தொழிலை மேம்படுத்துவதற்காக அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது “லூ லூ  குரூப் “என்ற மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 35000 கோடி ஆகும். மேலும் இவருக்கு பல நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்களும் ஷாப்பிங் மால்கலும் இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் தனது பூர்வீகம் என்பதால் யூஸ் அலி கொரோனா  பாதிப்பி காலங்களில் உதவிகளையும் கொரோனா  நோயாளிகளுக்காக 1400 கோடி செலவில் தனி மருத்துவ மையத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அதன் பிறகு சுமார் 6.8 பில்லியன் டாலர்க கொரோனா நிதி உதவியாகவும் வழங்கியிருக்கிறார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினர்களை பார்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு தனது ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளார். ஆகையால் கொச்சினில் உள்ள பனங்காடு பகுதியில் மீன்வள பல்கலைக்கழகதில் இருக்கும் ஹெலிபேட்டில் தரை இறக்குவதற்காக முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அப்பொழுது கேரளாவில் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதை உணர்ந்த விமானி ஹெலிகாப்டரை சுமார் 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு புதரில் ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளார். மேலும் விமானியின் இந்த பாதுகாப்பு செயலினால் யூசுப் அலி மற்றும் அவரது மனைவியும் எவ்வித பிரச்சனையுமின்றி  ஹெலிகாப்டரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த எதிர்பாராத சம்பவம் பற்றிக் கூறிய கேரள காவல்துறையினர், “விபத்து நடக்க இருந்த பகுதிக்கு அருகே சிறப்பான நெட் தேசிய நெடுஞ்சாலை துறை இருப்பதாகவும் காலம் இறக்கப்பட்ட இடத்தில் பல மின்சார கம்பிகளும் இருந்தது. ஆனால் விமானியின் முயற்சியால் ஹெலிகாப்டர் பாதுகாப்பான பகுதியில் தரையிறக்கப்பட்டது. ஆகையால் விமானியின் இந்த சாதுரியம் முயற்சியை பாராட்டுவதாகவும் “தெரிவித்துள்ளார்.

Categories

Tech |