இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் வங்கி கணக்கில் மாதம் 6000 செலுத்த வேண்டுமென சோனியாகாந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு மாதம்தோறும் 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். விருப்பப்படும் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று சோனியா காந்தியும் வலியுறுத்தியுள்ளார்.