Categories
உலக செய்திகள்

பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு… சூயஸ் கால்வாய் ஆணையம் உத்தரவு…!!!

எவர்கிரீன கப்பலினால் ஏற்பட்ட விபத்திற்கு சூயஸ் கால்வாய் நிறுவனம் பெரும் இழப்பீடு  கேட்டுள்ளது.

சீனாவில் இருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென   சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இந்த ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இக்கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும் கடும் முயற்சிக்கு பிறகு எவர்கிரீன் கப்பலை மீண்டும் மிதக்க செய்தனர்.

ஆனால் கால்வாய் ஆணையம் எவர்கிரீன் கப்பல் நிறுவனத்திடம் மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களின்  சம்பளத்திர்க்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இழுவை  படகுகளுக்கும் கால்வாயில் ஏற்பட்ட சேதத்திற்கும் மணலை அப்புறப்படுத்துவதற்கும் வணிக நீதியான இழப்பு என அனைத்திற்கும் சேர்த்து இழப்பீடு கேட்டது.

மேலும் சும்மா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தர வேண்டும் என்று எவர்கிரீன் கப்பல் நிறுவனத்திடம் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ‘ஒசாமா ரபீ’  தெரிவித்துள்ளார். இந்நிலையில் கப்பல் எவ்வாறு விபத்திற்குள்ளானது என்பது  குறித்த விசாரணை முடியும் வரை மற்றும்  எங்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டை கொடுக்கும் வரையிலும் கப்பலை இங்கிருந்து ஒரு துளி கூட நகர்த்த முடியாது என்று உறுதியாக எகிப்து சூயஸ் கால்வாய் நிறுவனம் கூறியுள்ளது..

Categories

Tech |