நெல்லையில் கவரிங் நகையை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தனியார் அடகு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தினுள் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை ஆய்வு செய்துள்ளனர். இதில் ஒருவர் கவரிங் நகையை அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் மேலப்பாளையம் காவல் நிலையத்தினுள் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசித்து வரும் பரமானந்தம் என்ற முதியவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு உதவி செய்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.