நெல்லையில் மணிமுத்தாறிலிருந்து தண்ணீரை முன்கர் சாகுபடிக்கு திறந்துவிட கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதி அமலில் உள்ளது. இதனால் நெல்லையிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறையை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அவர்கள் அங்கிருக்கும் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில் மே 1-ஆம் தேதிக்குள் மணிமுத்தாறு அணையிலிருக்கும் நீரை முன்கார் சாகுபடிக்காக பெருங்கால் பாசனத்தில் திறந்துவிட வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அதனை 40 அடி பெருங்கால் பாசனத்தின் விவசாயிகள் நல சங்கம் தலைவரான பாபநாசம் மற்றும் பலரும் சேர்ந்து கொடுத்துள்ளனர்.