குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் நாளை (ஏப்ரல் 14) ஒளிபரப்பாக உள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர் யார்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாபா பாஸ்கர் மாஸ்டர். பல திரைப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். மேலும் பாபா பாஸ்கர் இறுதிப்போட்டிக்கு மூன்றாவது நபராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் பாபா பாஸ்கர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.