Categories
சினிமா தமிழ் சினிமா

இன்பச் செய்தியை அறிவித்த பிரபல நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல சீரியல் நடிகை தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமீரா. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட சீரியலிலும் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சையது அன்வர் என்பவரும் சமீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகை சமீரா தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆகையால் ரசிகர்கள் பலரும் அன்வர் மற்றும் சமீராவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CNh4_lAgthC/?utm_source=ig_embed

Categories

Tech |