Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் போட்டு முடிச்சிட்டு … சஞ்சு சாம்சன் எதுக்கு அப்படி செஞ்சாரு..? ஷாக் ஆன அம்பயர் …!!

14 வது  ஐபில் தொடரில் ,நேற்று நடந்த 4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .

நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடும் போது தான்,ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது . இந்த ஐபில் சீசனில் பல வருடங்களாக ராஜஸ்தான் அணியிக்காக விளையாடிவரும் ,இளம் வீரரான  சஞ்சு சாம்சனை , ராஜஸ்தான் நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. நேற்று நடைபெற்ற போட்டியானது ,சஞ்சு சாம்சனுக்கு முதல் முதலாக ,கேப்டனாக பதவியேற்ற பின் பங்கேற்கும் போட்டியாகும். இரு அணி கேப்டன்களும் , டாஸ் போட மைதானத்திற்கு சென்றனர். அப்போது டாஸ் போடுவதற்காக சஞ்சு சாம்சன்  காயினை சுண்டினார்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் , பவுலிங்கை தேர்வு செய்தார் . அதன் பிறகு நடந்த நிகழ்வுதான் 3வது அம்பயருக்கு சர்ப்ரைஸாக இருந்தது. முதல்முறையாக கேப்டன் பதவி ஏற்று காயினை சுண்டியாதல் , சஞ்சு சாம்சன் சுண்டிய காயினை ,தன்னுடைய ஞாபகமாக வைத்துக் கொள்வதற்காக ,அதை எடுத்து கொண்டார். அதன் பின் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் அணியின்  கேப்டன் சஞ்சு சாம்சன் தனி மனிதனாக போராடி ,119 ரன்களை குவித்து, கெத்து காட்டினார் .

Categories

Tech |