Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு…. பள்ளிக் கல்வித்துறை தகவல்…!!

மகாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், உடனே அடுத்து அலையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகின்றது. தினமும் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 1.5 இலட்சத்தை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 63,294 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டு 349 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நோய்தொற்று பரவலை குறைக்க இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்பின் தடுப்பூசி போடும் பணியும் தீவிர முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 12- ம்வகுப்பு பொதுத்தேர்வு மே மாத இறுதியிலும், பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்தப்பட முடிவு செய்த நிலையில், கொரோனாவின் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலனும், ஆரோக்கியமும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்ற எண்ணத்தில் தேர்வினை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் தற்போது கடுமையான சூழ்நிலை நிலவுகின்றது இதனால் பொதுத் தேர்வுகளை நடத்த முடியாது. மாணவர்களின் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியமானது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசனை நடத்திய பின்பே இந்த முடிவினை எடுத்துள்ளோம். அதன்பின் இதேபோல சிபிஎஸ்இ, ஐ பி, ஐசிஎஸ்இ, கேம்பிரிட்ஜ் போன்ற கல்வி வாரியங்களும் தேர்வு தேதி இணை பரிசீலனை செய்யும்படி கடிதம் எழுதியுள்ளோம் என்று மந்திரி வர்ஷா கெய்க்வாட் அவர்கள் கூறியுள்ளார்.

Categories

Tech |