தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் சீனிவாசன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் ஸ்ரீனிவாசன் காலமானார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஸ்டெனோகிராஃபர் ஆக தன் பணியைத் தொடங்கிய இவர், 1953 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்த போது இவர் சேகரித்த செய்தியின் மூலம் பிரபலமடைந்து தி இந்து பத்திரிகையில் சேர்ந்த 30 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் சட்ட நிபுணராக இருந்தார். இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு முக்கிய பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து மூத்த பத்திரிக்கையாளர் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை நிபுணர்கள் சங்கத்தை நிறுவிய திரு ஜி.என் ஸ்ரீநிவாசன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.