நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நீராடி வரும் நிலையில் கொரோனா மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் திருவிழா நடத்த தடை விதித்துள்ள நிலையில் ஹரித்துவாரில் நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.