Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 6-ம்,7-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி…. மாநில இடைநிலை கல்வி வாரியம் முடிவு…..!!

 கொரோனா நோய் தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்ட நிலையில், இறுதி தேர்வு நடத்த முடியாததால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதனின் தாக்கம் அதிக அளவில் பரவியதால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் முழு ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதனால் பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவ மாணவிகளை இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். அதன்பின் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் அடுத்தகட்ட வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வகுப்பினை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றனர்.

கொரோனாவின் தொற்று குறையத் தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 6-ம், 7-ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக ராஜஸ்தான் மாநில இடைநிலை கல்வி வாரியம் அறிவிக்க முடிவு செய்துள்ளது.

Categories

Tech |