Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண் ஊழியருக்கு கொரோனா… முககவசம் இல்லாமல் அனுமதி இல்லை… மருத்துவமனையில் தீவிர கட்டுப்பாடுகள்..!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு செம்பனூர், கல்லல், நெற்புகபட்டி, கூமாச்சிப்பட்டி, அரண்மனை சிறுவயல் ஆகிய 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தில் நர்சுகள், டாக்டர்கள், அலுவலக ஊழியர்கள், டெக்னீஷியன்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 10-ஆம் தேதி இங்கு பணிபுரியும் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கிருமி நாசினிகள் கொண்டு மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணிந்து மட்டுமே மருத்துவமனைகளுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |