Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

11 வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சம்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால் இவர் 2வதாக காவியா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் முதல் மனைவியின் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி மற்றும் காவியா இருவருமே கூலி வேலை செய்து வறுமையில் இருந்தாலும் இவர்களுடைய மகளை திருவண்ணாமலை உள்ள டேனியல் மிஷின் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து இருக்கின்றனர்.

இதனையடுத்து இவர்கள் வறுமையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  மேல் சங்கம் கிராமத்தில் குடிபெயர்ந்துள்ளனர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊரான ஜிஞ்சம்பட்டிக்கு மூர்த்தி, காவியா மற்றும் அவரது மகளை அழைத்து சென்றுள்ளார். அதன் பின் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் மேல் சங்கத்திற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மாத்தூர் பேருந்து நிலையத்திற்கு காவியா மற்றும் அவரது மகள் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்த மகள் மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவியா பல இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காத காரணத்தால் மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் திருவண்ணாமலையில் நாகனுர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சரண்ராஜ் என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடித்து ஆசிரியர் சரண்ராஜ் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர். அதன் பின் கடத்தப்பட்ட மாணவியை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சரண்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |