உள்நோயாளியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் அந்தப் பெண் இருந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் அந்த அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த அறை மூடப்பட்டது. அதன் பின் கொரோனா பரிசோதனை உள்நோயாளிகள் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோன்று சென்னையில் இருந்து திருப்பத்தூர் அருகே மணமேல்பட்டி கிராமத்திற்கு தேர்தலுக்காக வந்த இரண்டு பேருக்கும், கொளுஞ்சிப்பட்டியில் ஒருவருக்கும், திருப்பத்தூரில் இரண்டு பேருக்கும், புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.