நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, தேர்தலுக்கு முன்பும் அதிமுக பிரியவில்லை. இன்றைக்கு ஒன்றைணைந்த அதிமுகவாக தான் இருக்கிறது. இதில் இருந்து பிரிந்து சென்று இருந்தார்கள். பிரிந்து சென்றவர் கிட்டத்தட்ட 90% பேர் வந்துவிட்டார்கள்.
இங்கு இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் அத்தனை பேரும் ஏற்கனவே வந்து விட்டார்கள். எஞ்சியவர்கள் இருக்கிறார்கள்… எஞ்சியவர்கள் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள்.
இரண்டு தலைமையும் எங்களுக்கு பழகி போய் விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சேர்ந்து தலைமை தங்குவது கூடுதல் பலமாக தான் இருக்கின்றது. இரட்டை தலைமை தாங்கி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டோம், தேர்தலை நடத்தி முடித்து விட்டோம்.
நிச்சயமாக ஹாட்ரிக் வெற்றியாக மூன்றாம் முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகின்றோம். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்ற தகவலிலின்படி 140 இடங்களுக்கு மேலாக நாங்கள் மட்டும் வெற்றி பெறுவோம். கூட்டணிகளோடு சேர்ந்து 200 இடங்களில் வெற்றி வெற்றி வாய்ப்புகள் எங்களுக்கு உள்ளது.