Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா இருவரின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான காடன் படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அறிவித்திருந்தார்.

மேலும் இவர்கள் இருவருக்கும் 2020 செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமண அழைப்பிதழை நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |