கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு ஆய்வாளர் மகேசன் காசிராஜன் காரைக்குடி பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் உள்ளன. அங்கு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் வந்தார்.
அங்கு அவர் கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறும் மையத்தை பார்வையிட்டார். அதன் பின் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரம் கேட்டிருந்தார். மேலும் அவர் சமூக இடைவெளி, முககவசம் ஆகியவற்றை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்றார்.