புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபட் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் மொபட்டில் முள்ளுர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கணேசனின் மொபட் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார்
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்