Categories
தேசிய செய்திகள்

அதிக காற்று…… கடல் சீற்றம் ”ரெட் அலர்ட்” தயார் நிலையில் மீட்பு படை …. மும்பைக்கு எச்சரிக்கை ….!!

மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால்  தானே, பால்கர் மாவட்ட மக்கள்  பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார சேவையும் தடை செய்யப்பட்டுள்ளதால் மும்பை நகர பொதுமக்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Image result for Mumbai rain

மும்பையில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , மும்பையில் தொடர்ந்து காற்று வீசக்கூடும். பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். கடல் சீற்றத்துடன்  காணப்படும். அலைகளின் உயரம் 4.5 மீட்டர் அளவுக்கு  எழும்பும்.மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மும்பை, தானே மற்றும் பால்கர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை காலை வரை கனமழை நீடிக்கும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தில் இருந்து தேசிய பேரிடர் மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |