Categories
உலக செய்திகள்

23 மில்லியன் டாலர்… ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியின் செலவு பட்டியல் வெளியீடு …!!!

ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்புச் செலவு குறித்த விவரங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முன்னிலை வகித்து வருகிறது. ஃபேஸ்புக் தலைமை அதிகாரியும் இணை மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிபடுத்தியது. இதில் அவரின் தனிப்பட்ட மற்றும் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்பு செலவிற்காக 13.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தியதாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பாதுகாப்பிற்காக 10 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது ஆக தெரிவித்துள்ளனர்.

இந்த செலவுகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் என பல காரணங்களுக்காக செலவிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மார்க்ஜுக்கர்பெர்க்   உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் அவரின் பாதுகாப்புக்காக செலவிட வேண்டியது அவசியமாக இருந்தது ஆக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |