மும்பையில் கொட்டிவரும் கன மழை வெள்ளத்தால் 4 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்.
மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால் தானே, பால்கர் மாவட்ட மக்கள் பரிதவித்தனர் . அங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண் மற்றும் தானே ரெயில் நிலையங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.அங்கங்கே மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை நகர பொதுமக்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.