தமிழ்நாட்டில் தற்போதைது பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பிரபல பின்னணி பாடகியின் (பெயர் குறிப்பிட முடியவில்லை) 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிரியார் ஹென்றி உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் 3 பேர் பாடகியின் உறவினர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.