Categories
Uncategorized

பாதிப்பு எண்ணிக்கை 13.70 கோடி…. தடுப்பூசி மட்டுமே தீர்வாகாது…. WHO வெளியிட்ட அறிவிப்பு….!!

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே உலகளவில் கொரோனா தொற்றினால் 13.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 லட்சத்திற்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிப்பு அதிகமான  முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில் தற்போது ஆசியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தாக்கம் குறைவாக இருந்தது என்றும் கடந்த மார்ச் முதல் பாதிப்பு  எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது எனக் கூறினார்.

உலகில் 750 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, பரிசோதனைகளை மேற்கொள்வது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மேலும் மக்கள் விழிப்புணர்வுடனும்,சமூக சிந்தனையுடனும் செயல்பட வேண்டும்.

கொரோனாவை தடுப்பூசியால் மட்டுமே கட்டுப்படுத்த இயலாது.  அதன் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். இதனிடையே படுக்கைகள் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன எனவே தடுப்பூசிகள் மட்டும் தீர்வாகாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

டெட்ரோஸ் அதானோம் கொரோனா தொற்று அதிக நாட்கள் தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் மக்களின் கூட்டு முயற்சியால் அதனை வென்றிட முடியும் என்றும் இந்த தொற்றுக்கள் சில மாதங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும், பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |