Categories
தேசிய செய்திகள்

அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசிக்கு அனுமதி.. நிபுணர்கள் குழு பரிந்துரை..!!

இந்தியாவில் மத்திய அரசு அவசர கால தேவைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை சுமார் 10 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் மத்திய அரசு, 45 வயதுக்கு அதிகமாகவுள்ள அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. இதனால் மத்திய அரசு 5 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் அடங்கும்.

இந்தியாவில் இதை தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. மேலும் இந்த நிறுவனமானது ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு உபயோகிக்க அனுமதி தருமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளது. இதற்காக கடந்த 1 ஆம் தேதியன்று மத்திய நிபுணர் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் நிபுணர்கள் குழு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை, இந்தியாவில் அவசரகால தேவைகளுக்காக செலுத்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

Categories

Tech |