Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் வேண்டாம் “5 பேருக்கு உதவினால் போதும்” பிரபல நடிகர் கருத்து ..!!

தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று  ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் . 

அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து  மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் .

Image result for rajkiran

 

இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எந்த அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வருவதில்லை . இந்நிலையில் பிரபல  குணசித்திர நடிகர் ராஜ்கிரண் தன் உழைப்பில் தான் வாழனும் என்று நினைப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறினார் . மேலும் , அரசியல் கட்சிகளில் சேர்பவர்கள், ஏதாவது ஒரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் சேர்கிறார்கள்.

 

இதுமட்டுமின்றி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் சுய உழைப்பாலும்,  அதில் வந்த பணத்தாலும்   மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்றும் ,  சேவை செய்ய விரும்பும் மனப்பான்மை உள்ளவர்கள் 5 பேருக்கு உதவினாலே போதும் நாடு நலமாகிவிடும் என்று ராஜ்கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் . இந்தத் தகவல் வைரலாகி வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Categories

Tech |