Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ இப்படி செய்…. அங்க போ… இப்படி பண்ணு…. என அரசியல் பிழைப்பு நடத்துறாங்க… அன்புமணி காட்டம் …!!

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், திருமாவளவன் அவர்கள் இளைஞர்களை தூண்டி விட்டு ,வன்முறையில் ஈடுபட சொல்லி, தூண்டிவிட்டு நீ இப்படி செய்…. அங்க போ… இப்படி பண்ணு…. அந்த காலத்தில் நம்மை அடக்கினார்கள்.

இந்த காலத்தில் அவர்களை நாம் அடக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களை எல்லாம்  இளைஞர்கள் மத்தியில் விதைத்து, வேறு விதமாக கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார். அது எல்லாம் வளர்ச்சிக்கு அழகு கிடையாது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள்… இன்றைக்கு படித்த இளைஞர்கள் யாருமே திருமாவளவன் மீது நம்பிக்கை வைக்கவில்லை.

நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். திருமாவளவன் அவர்கள் எங்களை எதிர்த்தால் தான் அவருக்கு அரசியல் பிழப்பு. எங்களை எதிர்த்தால்தான் அவர்  அரசியலில் பதவி கிடைக்கும், பொறுப்பு கிடைக்கும். எங்களை எதிர்த்தால் தான் ஏதோ ஒன்று இரண்டு சீட்டு போடுவார்கள் அவர் எடுத்துக் கொள்வார், அதேதான் இவ்வளவு காலம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருடைய நோக்கம் அவர் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால், எங்களை எதிர்க்க வேண்டும். ஆனால் எங்களுடைய நோக்கங்களை சீர்குலைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திமுகவும் சரி, அவருக்கு கீழ் இருக்கின்ற திருமாவளவன் அவர்கள் கூட இருக்கின்ற நபர்களை எல்லாம் அவர்களை தூண்டிவிட்டு ஏவிவிட்டு பிரச்சனைகள் உருவாக்குவதற்கு இப்பொழுது முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் என அன்புமணி விமர்சித்தார்.

Categories

Tech |