சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் சரக்கு வேனில் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் வேனின் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விட்டது. இதனால் தயிர் முழுவதும் சாலையில் கொட்டியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் அப்புறப்படுத்தி விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.