மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் புகழ் பெற்றது. அது இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறுகிறது.
அப்போது பக்தர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும், திருக்கல்யாணத்தை இணையதளத்தில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.