Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்… மாணவர்களின் உயிர் முக்கியம்… முதல்வர் கோரிக்கை…!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமன்றி  கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் தேர்வு எழுதப்போகும் 6 லட்சம் மாணவர்களில் உயிரும் உடல் நலனும் மிக முக்கியம். ஒரு லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது. எனவே சிபிஎஸ்இ பொது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |