நெல்லையில் உரக்கிடங்கினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதியான ஜோதிமணி ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகர பஞ்சாயத்திற்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மையின் திட்டம் அடிப்படையில் வளம் மீட்புக்கான பூங்காவாக உரக்கிடங்கு செயல்படுகிறது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையரான நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுப்பதையும் பார்வையிட்டுள்ளார். இதில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தின் உதவி இயக்குனரான சேதுராமன், செயற்பொறியாளராக பணி புரியும் ஜெகதீஸ்வரி, செயல் அலுவலரான கிறிஸ்டோபர் தாஸ் என்பவரும் மற்றும் பலரும் இவர் ஆய்வு செய்யும்போது உடனிருந்துள்ளனர்.