தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பதிவு துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.