நெல்லையிலிருக்கும் அகஸ்தியர் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பையிலிருக்கும் காசிநாதன் கோவிலிலும்,அகத்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இவ்விழாவில் தினமும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற தோடு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் இதில் மூலவரும், அம்பாளும் பல விதமான வாகனங்களில் எழுந்தருளி பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே கோவில் நிர்வாகம் தற்போது கொரோனா ஆங்காங்கே பரவி வருவதால் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விழாவில் பக்தர்களின் பங்கேற்பு மிகக்குறைவான அளவில் இது நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமண காட்சியை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.