தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பதிவு துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசின் உத்தரவிற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம்-பொருளாதாரம் இழந்து தவிக்கும் நிலையில் பத்திராபதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும் என தெரிவித்துள்ளார்.