நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்த படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான ஒரே நாளில் 24 கோடி வசூல் ஆகி சாதனை செய்தது. பலரும் இந்த படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள கர்ணன் படம் கொண்டாடப்பட வேண்டியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடியன்குளம் கலவரம் நடந்த காலகட்டத்தை தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அந்த தவறுகளை இரு தினங்களில் சரி செய்து விடுகிறோம் என உறுதியளித்தனர், நன்றி என தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.