நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6984 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 3289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.