இழப்பீடு தராமல் கப்பலை நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.
எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாயில் எவர்கீரன் என்ற சரக்கு கப்பல் தரை தட்டி நின்றுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் தரைதட்டி நின்றதால் 5 நாள் நீர்வழிப் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. இதனையடுத்து சூயஸ் கால்வாய் நிறுவனம் கப்பலை மீட்பதற்காக இரவுபகலாக முயற்சி செய்து இறுதியில் கப்பலை மீட்டு மிதக்க செய்துள்ளது.
ஆனால் இத்தனை நாட்களாக வேலை செய்ததற்கு இழப்பீடு வேண்டும் என சூயஸ் கால்வாய் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், மணலை அப்புறப்படுத்துவதற்காக செலவுகள், பயன்படுத்தப்பட்ட காரியங்களுக்கான செலவுகள், இழுவைப் படகுகளுக்கான செலவுகள், வணிகரீதியான நஷ்டம் ஆகிய அனைத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரு பில்லியன் டாலர் என இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது.
இதற்கு சூயஸ் கால்வாய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கப்பல் எப்படி தரை தட்டியது என்ற விசாரணை முடியும் வரையிலும் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை நகர்த்தவிட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.