நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீசர் நாளை வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குனர் அருண் சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் செல்லப்பிள்ளை.
இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் டீசர் நாளை காலை 11:05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மோசன் டீசரை விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.