Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர இப்படி செஞ்சிருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் பெருகிவிட்டது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் கிங்ஸ்டன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களை செய்து வந்ததால் அம்பை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிங்ஸ்டனை குண்டாசில் கைது செய்ய மாநகர காவல்துறை சூப்பிரண்ட் நெல்லை கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்ற கலெக்டர் அவரை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |