Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி என்னை ஏமாற்றிவிட்டார்…. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்…. வழக்கு தொடுத்த இந்திய பெண்….!!

இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹரி மீது வழக்கறிஞர் Palwinder Kaur  பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தற்போது அதனை மீறி  விட்டதால் அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் மின்னஞ்சல் மூலம் காதல் செய்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Palwinder Kaur வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய இளவரசர் மீது நடவடிக்கை எடுக்க பிரிட்டன் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த விசாரணையில் Palwinder Kaur  இதுவரை பிரிட்டன் சென்றதே இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த் சிங் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையில்லை என்றும் அதனை வைத்து தீர்ப்பு வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Categories

Tech |