Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்க வாழ்வாதாரம் போச்சு…! எங்களுக்கு நிவாரணம் கொடுங்க…. வேதனையில் பலா விவசாயிகள் …!!

கொரோனா அச்சம் காரணமாக அறுவடை செய்த பலா பழங்களை விற்க முடியாமல் பண்ருட்டி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பண்ருட்டி  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பலாப்பழம்  சாகுபடியை ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால்  சுமார் 1000 ஏக்கர் மேலாக அறுவடை செய்த பலாபழங்களை விற்க முடியாமல் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அமோக விளைச்சல் பலாப் பழம் சாகுபடியில் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. ஆனால் கொரோனாவால் அறுவடை செய்யப்பட்ட பலாபழங்களை விற்க முடியாமலும், ஏற்றுமதி செய்ய முடியாமலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, கொரோனாவால் கடந்த வருடம் நாங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தோம். இந்த வருடமாவது அந்த பாதிப்பை ஈடுகட்டலாம் என்று இருந்த நிலையில், இந்த வருடமும் கொரானா அச்சத்தால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த பாதிப்புக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என தெரிவித்தனர்.

Categories

Tech |