Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டப்படிப்பு படிச்சிட்டு இருந்தவர இப்படி செஞ்சிட்டாங்க…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக, வாலிபர் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் சத்திரத்தில் சட்டப்படிப்பு பயின்று வந்த அஜித் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக திரண்டு அஜித்தின் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே அவர்கள் அனைவரும் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் பேசி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

Categories

Tech |