Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறை இல்லை – மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் தடுப்பூசியை பயன்படுத்தினால் பற்றாக்குறை இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.67 கோடி தடுப்பூசிகள் இருப்ப்பில் உள்ளன. தடுப்பூசி போட்டுகொண்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85% குறைகிறது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |