பிரிட்டன் பண மோசடி மற்றும் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது.
பிரிட்டன் 3ZA என்னும் பிரிவின்கீழ் மியான்மர், பார்படாஸ், கேமன் தீவுகள், வடகொரியா, ஈரான் ,மொரீஷியஸ், மொராக்கோ,ஏமன் ஆகிய நாடுகள் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பிரிவில் வைத்துள்ளது . பிரிட்டன் அரசின் கொள்கைப்படி இந்த நாடுகள் பணமோசடி, பயங்கரவாத நிதி, சமநிலை மற்றும் சீரமைப்பு இல்லாத நாடுகள் என்றும் இந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்று எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பண மோசடி, பயங்கரவாத நிதி தொடர்பாக பாகிஸ்தானை அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது இந்த நாடுகளில் பாகிஸ்தான் 21வது நாடாக சேர்க்கப்பட்டுள்ளது.பிரிட்டன் எடுத்த இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி, ‘பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது உண்மைகளுக்கு புறம்பானது என்றும் இது அரசியல் தொடர்பான நோக்கம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.