Categories
மாநில செய்திகள்

கோவில்களில் திருமணம்: 10 பேர் மட்டுமே அனுமதி – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் அமர்ந்து கூடாது. கோவில்களில் 10 மணிக்கு மேல் தரிசனத்திற்கு  அனுமதி இல்லை. கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுப்பு போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |