Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டையில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கங்காநகர் பகுதியில் குமாரராஜன் என்பவர் வசித்து வந்தார். சினிமா நடிகரான இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குமாரராஜன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் அவரது மனைவி ஏன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தீர்கள் என்று கணவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரராஜன் தனது படுக்கையறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சிந்துஜா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |