மகராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப் படலாம் என்ற அறிக்கையை அறிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் திரண்டுள்ளனர்.
இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊர் அடங்கினாள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதில் பல சாப்பாடு, தண்ணீர், போதிய வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்து அரசு சிறப்பு ரயில்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டு நிலைமையை சரி செய்தது.
தற்போது இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படலாம் என்ற நிலைமையில் உள்ளது.இந்த ஊர் அடங்கினால் வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா சென்று வேலை பார்த்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்நிலையில் இன்று குர்லாவில் உள்ள லோக்மன்யாக திலக்ரயில் நிலையத்தில் திடீரென ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயணம் செய்ய திரண்டுள்ளனர். இதனால் மக்களிடையே ஒருவிதமான பயம் நிலவியது.
இதுகுறித்து மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ தலைமை அதிகாரி”நாங்கள் வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்கள் விடுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். கோடை காலத்தில் இது போன்று கூட்டம் வருவது இயல்பான ஒன்றுதான் இதனால் யாரும் பீதி அடைய வேண்டாம்” இது வழக்கமான கூட்டம்தான். வழக்கம்போல் ரெயிரல்களுக்கு இடையில், 106 கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.